வாணியம்பாடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.

வாணியம்பாடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை   மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலையில் வணிகர் சங்கம் பேரமைப்பு சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு, சமையல் எண்ணை உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


நிகழ்ச்சிக்கு பேரமைப்பின் மாநில துணை தலைவர் சி.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சி.கிருஷ்ணன், செயலாளர்  கே.பி.எஸ்.மாதேஸ்வரன், பொருளாளர் ஏ.ஜி.எஸ்.செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கலந்து கொண்டு  சுமார் 500 குடும்பங்களுக்கு தலா ரூ.750 மதிப்பிலான அரிசி,பருப்பு, சமையல் எண்ணை உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.


இதில் வருவாய்கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், வட்டாட்சியர் சிவபிரகாசம், சங்கத்தின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ். அருண் குமார், செய்தி தொடர்பாளர்
ஏ.பத்ம நாபன்,மாவட்ட துணை தலைவர்
பி.செல்வமணி, ஓ.ஏ.சித்திக் அஹமத்,பொருளாளர்
கே.வெங்கட்ரமணன் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Popular posts
இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி - முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா
Image
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
144 தடை உத்தரவு : டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Image
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
Image
Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்
Image