இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ந்தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் ஒரு நாள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு (காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை) கேட்டுக்கொண்டார். இதையொட்டி நேற்று முன்தினம் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்கள் இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடி சீல் வைத்தன. 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மக்கள் ஊரடங்கு உத்தரவின் போது வடமாநிலங்களில் மக்கள் கூட்டமாக நின்று கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பலர் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி வருத்தப்பட்டார்.
கொரோனா தடுப்பு விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை தீவிரமாக பின்பற்றுமாறு அவர் நாட்டு மக்களிடம் டுவிட்டர் மூலம் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கிய உரையை ஆற்றுகிறார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.