சென்னை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110வது விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.
நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயரும்.