" alt="" aria-hidden="true" />
144 தடை உத்தரவு டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 192 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,36,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நேற்று காலை முதல் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தற்போது, பொதுமக்களின் சேவைக்கு 50% மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளிமாநிலத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொடர்பான அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பால், காற்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்க தடையில்லை என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் கூட வேண்டாம் எனவும், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயக்க கூடாது எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடமாக தற்போது டாஸ்மாக் மதுபான கடைகள் மட்டுமே உள்ளது. டாஸ்மாக் மதுபானங்களை தமிழக அரசு அத்தியாவசிய பொருட்களில் சேர்த்து விட்டதா என சந்தேகம் நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க கேட்டு கொள்ளும் அரசு, மதுபானம் எனும் கொடிய வைரஸில் இருந்து தமிழக மக்களை காக்கும் பொருட்டு, டாஸ்மாக் மதுபான கடைகளையும் வரும் 31-ம் தேதி மூட வேண்டும் எனவும், படிபடியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என கூறிய வரும் தமிழக அரசு, நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்